தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

0
172

தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். தற்போது 176ம் ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தினமும் காலை தொடங்கி இரவு வரை பல இசைகலைஞர்கள்தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விழாவின்முக்கிய நிகழ்வான ஆராதனை விழா 11-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொள்ள உள்ளார்.இசை நிகழ்ச்சி முடிந்து ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்துகாலை 10 மணிக்கு நாகசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அதனை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தஞ்சை மற்றும் திருவையாறு பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.