முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! எந்த இடத்தில் தெரியுமா?
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதரமற்றதாகவும் இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,சர்க்கரை,பச்சரிசி மற்றும் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி பொங்கல் பரிசினை பெற டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதன் பிறகு நேற்று முன்தினம் முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.மேலும் பொங்கல் திருநாள் என்றாலே தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது.ஆனால் கடந்த ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.
தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது தொடர்ந்து நடத்தபடுகின்றது.மேலும் ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை,அலங்காநல்லூர்,பாலமேடு.அவனியாபுரம் தான் முதன்மை வாய்ந்ததாக உள்ளது.இதுமட்டுமின்றி ஒரு சில கிராமங்களிலும் நடத்தபடுகின்றது.ஆனால் தலைநகரான சென்னையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதே இல்லை.அதனை தொடர்ந்து சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என கேள்வி எழுந்து வந்தது.
அதனை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் மார்ச் ஐந்தாம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த போட்டியில் முதல்வர் முக ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உட்பட மொத்தம் 501 காளைகள் இடம்பெற உள்ளது.
மேலும் தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது.பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.போட்டியில் முதல் இடம்பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்ட உள்ளது.இரண்டு மாதம் இருக்கும் நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.