பால் உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு! அரசு வழங்கும் பொங்கல் பரிசு!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.மேலும் பொங்கல் பண்டிகையை அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி மற்றும் சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது.
அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் தொடங்கி விட்டது.மேலும் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் முழுநேர,பகுதிநேர,தொகுப்பூதிய,தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ரூ 3000 போனஸ் வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பால்உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அரசுக்கு அனுப்பியிருந்த செய்தி குறிப்பினை அரசு ஆய்வு செய்தது.அதனால் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுகள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் தகுதிவாய்ந்த 22,895 பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்க தொகை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊக்கத் தொகையினை வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சம்பந்தப்பட்ட தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.