குதிகால் வெடிப்பை ஏழே நாளில் சரி செய்யும் அற்புத வீட்டு வைத்தியம்! 

0
226

குதிகால் வெடிப்பை ஏழே நாளில் சரி செய்யும் அற்புத வீட்டு வைத்தியம்! 

குதிகால் வெடிப்பை நாம் ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும். இல்லையெனில் அது முழுவதும் பரவி நமது கால்களையே அசிங்கப்படுத்தி விடும். ஆரோக்கியத்தையும் குலைத்து விடும். நமது உடலை தாங்கி பிடிப்பதே கால்கள் தான்.  அதிலேயும் குதிகால்கள் தான். அவற்றை அழகாகவும் ஆரோக்கியமானதாகவும் பாதுகாக்க வேண்டும். வீட்டிலேயே எளிய குறிப்புகள் மூலம் குதிகால் வெடிப்பை சரி செய்யலாம். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

குதிகால்வெடிப்பு, சேற்றுப்புண், பூஞ்சை தொற்று, இவை அனைத்தும் கிருமிகளால் வருவதுதான். அதனால் நமது கால்களில் உள்ள கிருமிகளை முதலில் வெளியேற்ற வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு கால்களை சுத்தப்படுத்த வேண்டும்.

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு, மற்றும் மஞ்சள் தூள் இரண்டு ஸ்பூன். ஆகியன எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலையை உருவி போடவும். பின்னர் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். இதை அடுப்பில் எடுத்து வைத்து நன்கு கொதிக்க விடவும். வேப்பிலையின் சத்துக்கள் அந்த நீரில் இறங்கும் அளவு நன்றாக கொதிக்க விடவும். நம் காலில் கண்ணுக்கு தெரியாத தூசிகள் இருப்பதால்தான் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் வீட்டிற்கு வந்தவுடன் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். பாதங்கள் கால் இடுக்குகளில் தேங்காய் எண்ணெயை தேய்ப்பது நல்லது.

வேப்பிலை நீர் நன்றாக கொதித்ததும் இறக்கி நமது பாதம் மூழ்கும் அளவு உள்ள பாத்திரத்தில் ஊற்றவும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது நமது பாதங்களை அதில் கால் மணி நேரம் வைத்து ஊறவிட்டு ஸ்கிரப் செய்ய வேண்டும். நன்றாக கழுவியயுடன் சுத்தமான துணியினால் கால்களை நன்றாக துடைக்க வேண்டும்.

அடுத்து வெள்ளை மெழுகுவர்த்தி ஒன்றினை எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் வரும் அளவு துருவி கொள்ள வேண்டும். இதை ஒரு கண்ணாடி பவுலில் போட்டு அதில் ஒரு நான்கு ஸ்பூன் அளவு கடுகு எண்ணெய் சேர்க்கவும். தற்போது இதை டபுள் பாய்லர் முறையில் சூடு செய்யவும். அதாவது ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதித்ததும் அதில் மெழுகுவர்த்தி உள்ள பவுலை நீரின் மேல் வைக்கவும். அந்த வெப்பத்திலேயே மெழுகுவர்த்தி கடுகு எண்ணெயுடன் நன்றாக கலந்து விடும். இதை வெளியே எடுத்து வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுதே நமது காலில் வெடிப்பு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்த்து அதன் பின்பு காலுறைகளை அணிந்து கொண்டு தூங்கச் செல்லலாம். பின்னர் காலையில் எழுந்து மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் நமது கால்களை ஊறவிட்டு சுத்தம் செய்தால் போதும்.

பின்னர் கால்களை துடைத்துவிட்டு அதில் சுத்தமான தேங்காய் எண்ணெயை தடவவும்.இதேபோல் ஏழு முதல் பத்து நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு செய்து வர குதிகால் வெடிப்பு முற்றிலும் அழிந்து விடும்

 

Previous articleமத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !
Next articleபோக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதிகளில் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்!