போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதிகளில் இரவு நேரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்!
இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் இருக்கைகள் முதலில் நிரம்பியது.
அதனை தொடர்ந்து நேற்று முதல் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கம் தொடங்கியது.அதனையடுத்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இரவு நேர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை போக்குவரத்துத்துறை சார்பில் மொத்தம் 15,619 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் சில பேருந்துகள் அதிகாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு சில வழித்தடங்களுக்கு மட்டும் குறைவான பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் வரும் ஜனவரி 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை மற்றும் 18 ஆம் தேதி புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 பேருந்துகளும்,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 125 பேருந்துகளும் மாநகர போக்குவரத்து சார்பில் இயக்கப்பட உள்ளது.