தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலமாக அரசி,கோதுமை,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் குறிப்பிட்ட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தேவைக்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம்.ஒரு சில ரேஷன் கடைகளில் அனுமதி வழங்கபடாத பொருட்களை கட்டுப்பாடற்ற பிரிவுகளில் விற்பனை செய்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.அதுமட்டுமின்றி அவை காலாவதி தேதி முடிந்தும் தரமற்ற பொருட்களாக உள்ளது என பல புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கட்டுப்பாடற்ற பிரிவுகளில் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம் நியாய விலை கடைகளில் கட்டுப்பாடு ஏற்ற பொருட்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.