இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

0
170

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்! 

அரசு பணிகளில் தேர்வு பெறுவதற்கான முக்கிய சட்ட முன் வடிவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் 40% தமிழ் மொழியில்  தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன்படி தமிழில் போதிய அறிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்ந்திருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழியில் போதுமான அளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சட்டத்திருத்தம் அதில் கொண்டுவரப்பட்டது.

மாநிலங்களில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும்  மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்துள்ள இளைஞர்கள்100% சதவீதம் ஆட்சேர்ப்பு செய்வதை உறுதி செய்திட ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை கூறுகிறது. இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு  டிசம்பரில் கொண்டு வந்த அரசாணைக்கு செயல் வடிவம் விதமாக ஒரு மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி தமிழக அரசின் நிரந்தர பணிகளுக்கு நடைபெறும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் திருத்த சட்டம் முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Previous articleபொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 
Next articleகொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு!