பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 

0
110

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகின்ற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மும்பையில் நேற்று வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வருகின்ற ஜனவரி மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்னும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த மாதம் 28 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாள் மற்றும் அடுத்த நாள் 29 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அடுத்து 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் மொத்தம் நான்கு நாட்கள் வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் நரேந்திர சௌகான் வேலை நிறுத்தம் பற்றி கூறியது,

சம்பள உயர்வு, தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, புதிய ஊழியர்களை தேர்வு செய்வது, ஓய்வூதியத்தில் மாற்றம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.