ஆளுநரை கொலை செய்ய தீவீரவாதிகளை செட் செய்யும் திமுக!! வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை!!
சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தமிழக அரசு கொடுத்த உரையை முழுவதுமாக கூறாததால் உடனடியாக ஸ்டாலின் அது குறித்து விமர்சனம் செய்ததை யொட்டி அவர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.இதனையடுத்து ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு அவருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஆளுநரின் போக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து இது குறித்து கூறி மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.இதனிடையே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வந்தது.
திமுக பேச்சாளர் அந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது, ஆளுநர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்ல மாட்டேன் என்று தகர்த்து இருந்தால் நானும் செருப்பால் அடிப்பேன் என்று கூறியிருப்பேன் அதற்கான உரிமை கூட இல்லையா என்று கூறினார்.
அதேபோல அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று ஆளுநர் அடம்பிடித்தால் அவர் உடனடியாக காஷ்மீருக்கு போகட்டும், நாங்கள் அவரை சுடுவதற்காக தீவிரவாதிகள் வைத்துக் கூட கொள்வதற்கு ரெடியாக உள்ளோம் என்று சர்ச்சைக்குரிய விதமாக திமுக பேச்சாளர் பேசினார்.
இந்த வீடியோவானது வைரலானதை அடுத்து ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுவதா என ஆளுநர் மாளிகையில் இருந்து இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்.அந்த வகையில் திமுக பேச்சாளர் சிவாஜி மீது ஆளுநருக்கு எதிராக தகாத வார்த்தைகள் பேசியதாகவும் அவரது வேலையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் சட்டப்பிரிவு 124 கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.