முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

0
304
Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!
Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!

முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாள் அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்குவது வழக்கம் தான்.

அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்தான். அதிலும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிக புகழ்பெற்றது.

அந்த வகையில் இன்று முதல் களமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி உள்ளது.அதில் மொத்தம் 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இதில் ஆயிரம் காளைகள் களமிறங்க தயாராகியுள்ளது. வெற்றி பெரும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, சைக்கிள், கட்டில், தங்க நாணயம் போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றது. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி விளையாடி வருகின்றனர். ஊர் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகமாக கண்டு களித்து வருகின்றனர்.

Previous articleசர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!
Next articleஇன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here