இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

0
135

இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

தமிழக மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு கொண்டாடி வருவதை ஒட்டி இந்த வருடமும் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் கூறி வீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

ஆனால் உயர்நீதிமன்றமோ பல நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என்று உத்தரவிட்டதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

அந்த வகையில் முதலில் அவனியாபுரத்தில் மட்டும் ஆயிரம் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டதோடு 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல நேற்று மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியானது கோலாகலமாக நடைபெற்றது. இதிலும் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் மூன்று இடத்தை குறிப்பிட்டு சில வீரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

அதில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்த அரவிந்த் என்பவரை காளை முட்டியதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

இவ்வாறு வீரம் மிகுந்த விளையாட்டில் மாடு பிடி வீரர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு ஜல்லிக்கட்டு களத்தில் காளை மோதி உயிரிழந்த மாடுபிடி வீரர்களுக்கு தற்போது தமிழக அரசு நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் வழங்குவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் புத்துணர்ச்சி உண்டாகும் நாள்!!
Next articleமீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் விலகும் நாள்!!