இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை சரிவு!

0
195
Here's a good news for you housewives! Gold price collapse!
Here's a good news for you housewives! Gold price collapse!

இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை சரிவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதன் காரணமாக பலரும் தங்கம் போன்ற பொருட்களின் மீது முதலீடு செய்ய எண்ணினார்கள்.அதனால் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.

மேலும் கடந்த2022 ஆம் ஆண்டு  தீபாவளி பண்டிகையை தொடங்கி தற்போது பொங்கல் பண்டிகையை வரை தங்கத்தின் விலை உயர்ந்து தான் வருகின்றது.அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 42,368 க்கு விற்பனையானது.அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளே ஒரு சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ 42,536 க்கு விற்கப்பட்டது. ஒரு கிராமிற்கு 21 ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ 75 க்கு விற்பனையானது.அதனை தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ 75.80 க்கு விற்பனையாகின்றது.மேலும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ 75,800 க்கு விற்பனை செய்யபடுகின்றது.

மேலும் நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 4,346 க்கு விற்பனை செய்யபடுகின்றது.அதனை தொடந்து இன்று காலை ஒரு கிராம் 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து ரூ 4337 க்கு விற்பனை செய்யபடுகின்றது.வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.அந்த வகையில் நேற்று மாலை 75,300 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி.இன்று காலையின் நிலவரபடி கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்துள்ளது.அதனால் ஒரு கிலோ ரூ 74,800 க்கு விற்பனையாகின்றது.மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ 74.80 க்கு விற்பனை செய்யபடுகின்றது.

Previous articleஅறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! 
Next articleவாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!