திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!!
தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய உரையால் அடுத்தடுத்து பரபரப்பு சூழல் உண்டான நிலையில் அவரை எதிர்த்து பல கட்சியின் சார்பாக கண்டனங்கள் எழுந்தது.
மேலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டங்கள் நடந்தது. அந்த வரிசையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடும் விதமாகவும் அவதூறு சுமத்தும் விதமாகவும் பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் மீது புகார் அளித்தனர். ஆளுநரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவரது வேலையை செய்யவிடாமல் தடுத்துள்ளதால் சட்டப்பிரிவு 124 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
தற்பொழுது மீண்டும் ஆளுநர் மாளிகையிலிருந்து உயர்நீதிமன்றத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடுக்கும்படி மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நடந்து வரும் நிலையில் இவ்வாறு அடுத்தடுத்து திமுகவிற்கு அழுத்தம் கொடுப்பது புதிய பிரச்சனையை கிளப்ப உள்ளதாக இருக்கிறது.
இவ்வாறு திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளதால் முதல்வர் சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.இவர்களை பழி வாங்கவே இவ்வாறு ஆளுநர் பின் இருந்து புதிய வழக்குகளை கொடுத்து இவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.