அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இவர்கள் ஊக்க ஊதியம் பெற தகுதியுடையவர்கள்!
தமிழகத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கம் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த தகுதியை பெற்றிருந்தாலும் அல்லது அதற்கு அதிகமாக படித்திருந்தாலும் அவர்களுக்கு ஊக்க ஊதியம் கிடைக்கும்.
இளங்கலை, முதுகலை கல்விவியல் என ஒவ்வொரு படிப்பிற்கும் உதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பணியில் சேர்ந்த பிறகு ஆசிரியர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால் அவர்கள் முறையாக அனுமதி பெற்ற பிறகு உயர்கல்வியை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனுமதி பெறாமல் படித்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் பெற தகுதியான நபர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர்கள் அனுப்பப்படும் பட்டியலின் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.