முதன் முதலில் பைக் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம்! அரசு வெளியிட்ட அசத்தல் சேவை!

0
164
Introducing the first bike ambulance facility! The government issued a strange service!
Introducing the first bike ambulance facility! The government issued a strange service!

முதன் முதலில் பைக் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம்! அரசு வெளியிட்ட அசத்தல் சேவை!

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியாக திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை கூறினார்கள். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயணச்சீட்டு வழங்குதல் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் போன்றவற்றை அறிவித்தது.

எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மகளிருக்கு கட்டணமில்லாத பயண சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரை இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. பள்ளிகளுக்கு நான் முதல்வன் திட்டம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் என அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போலவே சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றாக தற்போது பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின மக்களே அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதனால் மழை, வெள்ளம் என்ற பேரிடர் காலங்களில் நோயாளிகளை கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பாம் நகரில் இருந்து ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் இருசக்கர வாகனத்துடன் படுக்கை வசதி கூடிய முதலுதவி பெட்டி மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக மூன்று பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K