இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது?
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் பண்டிகையின் பொழுது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதனால் 850 கோடி வசூல் ஆனது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலம் பல வகையான மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் இதற்காக 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் மற்றும் 11 நிறுவனங்களிடமிருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மதுபான வகைகள் கணினியில் பதிவு செய்யப்படுகின்றது.
இருப்பினும் கடைகளில் நடைபெறும் விற்பனை விவரம் குறித்து கணினியில் பதிவு செய்யப்படுவதில்லை. அதன் காரணமாக மதுபான கடை ஊழியர்கள் மாவட்டம் மேலாளர்களின் அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட நிறுவனம் மது வகைக்கு அதிக முன்னுரிமை அளிப்பது, மது விற்பனை வசூல் பணத்தை குறைத்துக் காட்டுவது, ஒரே நபருக்கு பெட்டி பெட்டியாக விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என புகார்கள் எழுந்து வருகின்றது.
இதை தடுக்க கிடங்களில் இருந்து மது வகையை கடைகளுக்கு அனுப்பி குடிமகன்களிடம் விற்பனை செய்வது வரை முழுமையாக கணினி மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து மது கடைகளுக்கும் பார் கோட் ஸ்கேனர் கருவிகள் வழங்கப்படும்.அதில் மது பாட்டிலை ஸ்கேன் செய்த பிறகு தான் விற்பனை செய்ய முடியும்.
மேலும் அனைத்து கடைகளுக்கும் இணையதளம் மென்பொருள் வாயிலாக ஒருங்கிணைக்கப்படும் இதனால் ஒவ்வொரு கடையிலும் அவ்வப்போது நடக்கும் அது விற்பனை, மதுவகை இருப்பு, வசூல் பணம் முதலிட்ட விவரங்களை கணினியில் எந்த இடத்தில் இருந்தும் உயர் அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் என அனைவரும் கண்காணிக்க முடியும்.
கணினி மைய மென்பொருள் உருவாக்கம் பார்கோடு கருவிகள் சப்ளை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுவதற்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து கணினிமய பணிகளை துவங்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.