முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.கொரோனா பெருந்தொற்று குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளை அதிகம் பாதிக்கக்கூடும் என எண்ணி பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.
மேலும் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுவை,காரைக்கால் என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.அந்த மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கடந்த மாதம் தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு இன்று திருப்புதல் தேர்வு நடைபெறுவது கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அதனைதொடர்ந்து இன்று அனைத்து பள்ளிகளுக்கும் புதன் கிழமை பாடவேளை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.