கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

0
184
College students get three days off a month! Information released by the government!
College students get three days off a month! Information released by the government!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

கேரள அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்ததது.மேலும் கல்லூரியில் ஓவ்வொரு பருவத்திலும் கட்டாயம்  75 சதவீதம் வருகை பதிவு கொண்டிருக்க வேண்டும்.அப்போது தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து 75 சதவீதம் வருகை பதிவில் இருந்து கூடுதலாக 2 சதவீதம் தளர்வு அளித்து அறிவிப்பு வெளியானது.அதனால் மாணவிகளுக்கு 73 சதவீத வருகை பதிவை பெற்றிருந்தாலே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் இந்த நடைமுறையை பின்பற்றி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு நடைமுறைப்படுத்தும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

அப்போது அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு வகையான பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.அதன் காரணமாக அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஓய்வு தேவை என மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த சிறந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் உள்ள கல்லூரி,பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை அரசு கட்டாயமாக்கியுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக பிகாரில் இந்த நடைமுறை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது?
Next articleதை அமாவாசைக்கு முன்னோர்களை தரிசித்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும்!! ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்!