ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடிக்கும் நாள்!!

0
203

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார விருத்திக்காக எதிர்பார்க்கும் நன்மைகள் பெறுவதற்காக சில முக்கிய பிரபலங்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலை துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் கவனமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபா வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும் நாள்!!
Next articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here