கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் விலகும் நாள்!!

0
156

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் விலகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் விலகும் நாள். நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு பாராட்டுக்கள் இன்றைய தினம் குவியும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை தருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கண்டிப்பாக வந்து கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைப்பதால் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு இருக்கும் நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here