தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அப்டேட்! பெண்களுக்கு ரூ 1 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகம்!
தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளில் முதன்மை பெற்று வரும் சேவைகளில் ஒன்றாக இருப்பது ஆட்டோ.இந்த ஆட்டோ சேவையில் தனியார் நிறுவனங்கள் எண்ணற்ற செயலிகளை உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. வீட்டில் இருந்த படியே செல்போன் மூலமாக ஆட்டோவை முன்பதிவு செய்தால் குறித்த நேரத்தில் ஆட்டோ வீடு தேடி வரும்.
ஆட்டோ ஓட்டுவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது அரசானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தமக்கென சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டர் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் ஐஏடி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் அவரவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவி தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டபடி வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமான ஆட்டோ வழங்க மானியம் வழங்கப்படும்!