சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

0
174

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். இன்றைக்கும் உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் யோசித்து எடுப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி உடைய சிறு சிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனத்தை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகம் செல்ல பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி அடையும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here