தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

இயக்குனர் மணிரத்தனத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி சித்தார்த்.அவருடைய இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறைய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்தன இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை பத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி.

நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவேட்டாக  இருப்பவர்.அடிக்கடி இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்வீட் செய்வார்.அந்த வகையில் அண்மையில் மதுரை விமான நிலையத்திற்கு அவரது குடும்பத்தினரிடம் வந்ததாகவும் அப்போது அங்குள்ள அதிகாரிகள் ஹிந்தியில் பேசியதாகவும் தான் ஆங்கிலத்தில் பேச கூறியபோது அதனை மறுத்து ஹிந்தியிலேயே பேசியதாகவும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக தகவல்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே இணையத்தில் பரவி வருகின்றது.இவர்கள் இருவரும் தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது என கூறப்படுகின்றது.

மேலும் அதிதி கடந்த மாதங்களுக்கு முன்பி  பிறந்த நாள் கொண்டாடினார்.அப்போது சித்தார்த் வாழ்த்து தெரிவித்திருந்தார் அதில் என் இதயத்தின் இளவரசியே என குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ஷர்வானந்த்தின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்கு சித்தார் மற்றும் அதிதி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் மகாசமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் ஷர்வானந்த் மற்றும் சித்தார்த்,அதிதி மூவரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment