விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்!

0
234
Actress Khushbu, who was involved in an accident, traveled to Delhi! Supporters who are comforting!
Actress Khushbu, who was involved in an accident, traveled to Delhi! Supporters who are comforting!

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பு.80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ,பிரபு மற்றும் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர் சில படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார்.

அரண்மனை,அரண்மனை 2,கலகலப்பு போன்ற படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.இவர் சில படங்களில் ஹிரோவாக நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார்.அதனை குஷ்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.அப்போது அவர் என்னுடைய அண்ணனின் பயணம் இன்றுடன் முடிவடைந்தது என குறிப்பிட்டிருந்தார்.

திரையுலகினர் பலரும் குஷ்புவிடம் இரங்கலை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில்  அண்மையில் அவருக்கு விபத்து ஏற்பட்டது.அந்த விபத்தில் குஷ்புவின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து குஷ்பு அவருடை டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் தனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.ஆனாலும் தனக்கு ஓய்வெடுக்க நேரம் இல்லை.அதிக வேலை இருகின்றது.

காலில் ஜவ்வு கிழிந்த நிலையில் கூட வேலை காரணமாக டெல்லிக்கு செல்கின்றேன் என கூறியுள்ளார்.அதனை கண்ட அவருடைய ஆதரவாளர்கள் நீங்கள் வீட்டிலேயே ஓய்வெடுங்கள் வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கமெண்ட் செய்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Previous articleஇல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Next articleவிமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!