வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா?
மும்பையில் ஜனவரி 13ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாளை நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து தான் வரும் ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அதாவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அன்றும் வங்கி ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
இதுபோன்று நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டால் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தான் பொங்கல் விடுமுறை என நான்கு நாட்கள் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போதும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கபட்டால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள் என கூறியுள்ளனர்.
மக்கள் பண பரிவர்த்தனைக்கு ஏடிஎம் சேவையை பயன்படுத்தினாலும் அவை முழுமையாக செயல்படும் என்பது அனைவருடைய மனதிலும் கேள்வி குறியாகத்தான் உள்ளது.இருப்பினும் வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது வரையிலும் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வங்கிகளில் குறைவான ஊழியர்கள் பணி புரிந்து வருவதினால் தான் வாடிக்கையாளர்களின் பாதிப்படைகின்றது.
அதனால் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் இந்த போராட்டம் வேண்டாம் என வங்கி ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் அதில் எந்த ஒரு உத்தரவாதமும் வழங்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் நேற்று வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதில் மொத்தம் ஒன்பது வங்கி ஊழியர்களின் சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தது. இருப்பினும் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்த போராட்டம் தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர்.