பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்! 

0
211

பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்! 

இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை முதன் முறையாக சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது.

ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்பிவி எனப்படும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் என்ற வைரசினால் ஏற்படும் இந்த புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து செர்வாவேக் என்ற பெயரில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியை சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியை முதலில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு தடுப்பூசியின் விலை ரூ.200 முதல் ரூ.400 வரை வழங்குவதற்கு சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியானது ரூபாய் 3500 முதல் ரூபாய் 4000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

 

Previous articleமூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்! 
Next articleகுட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்