கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!

0
203

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். இன்றைய தினம் உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் விலகுவதால் தெளிவுடன் காணப்படுவீர்கள். நிதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டைகள் குறைந்து சந்தோசம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் இருந்து வந்த வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் மறையும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த அச்சம் குறையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சில பிரச்சனைகள் ஓயும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

 

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!
Next articleஇடது கண் துடித்தால் இவ்வளவு கெடுதலா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here