இடது கண் துடித்தால் இவ்வளவு கெடுதலா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
688

இடது கண் துடித்தால் இவ்வளவு கெடுதலா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

கண் துடித்தால் நல்லதா கெட்டதா கண் துடித்தால் என்ன பலன் தெரியுமா.பொதுவாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமது கண்கள் வழக்கத்திற்கு மாறாக துடிக்கும் அதற்கு என்ன காரணம் அதை நல்லதா கெட்டதா என்பதை விரிவாக காணலாம்.

நம் கண்கள் பொதுவாக ஒரு செயலை செய்யும் பொழுது அல்லது அதிகப்படியான வெளிச்சம் பார்ப்பதன் காரணமாக கண்கள் துடிப்பு ஏற்படும். எவ்வித செயலும் செய்யாத பொழுது கண்கள் துடித்தால் அதற்கு ஒரு சில காரணங்கள் ஆன்மீக ரீதியாக உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக வலது கண் துடித்தால் நம் மனதில் நினைக்கக்கூடிய நிகழ்வுகள் நடக்கும் என்பதை உணர்த்தும் அதாவது கணவன் மனைவி பிரச்சனை தீரும், புதியதாக தொழில் ஆரம்பிப்பது போன்ற நம் மனதில் நினைக்கக்கூடிய நிகழ்வுகள் நடக்க போகிறது என்பதனை உணர்த்தும்.

அதுபோலவே இடது கண் துடித்தால் கவலை அல்லது கஷ்டம் ஏதாவது ஒரு தீமை செயல் நடக்கப் போகிறது என்பதனை உணர்த்தும். வலது கண்ணின் இமை துடிக்கும் பொழுது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் மற்றும் இடது கண்ணின் இமை துடித்தால் நம் வாழ்க்கையில் கவலை தரக்கூடிய நிகழ்வுகள் ஏற்பட போகிறது என்பதனை உணர்த்தும்.

இடது கண்ணை விட வலது கண் துடித்தால் நல்ல பலன்களை நம் வாழ்வில் அளிக்கும். வலது கண்களில் உள்ள புருவம் துடைத்தால் பணம் அல்லது சொத்து அல்லது வரவு கிடைக்கப் போகிறது என்பதனை உணர்த்தும்.

இடது புற கண்களில் உள்ள புருவங்கள் துடித்தால் குழந்தை பாக்கியம் பெறப் போகிறீர்கள் என்பதனை உணர்த்தும். புருவங்களுக்கு இடையே உள்ள நெற்றி பகுதி துடித்தால் நமக்கு பிரியமாக உள்ளவர்கள் நம்மை தேடி வருவார்கள் அல்லது பிரிந்த சொந்தம் சேரும் என்பதனை உணர்த்தும்.

கண்களை சுற்றி இடங்களில் வழக்கத்திற்கு மாறாக துடித்தால் எவ்வித நன்மைகள் அல்லது தீமைகள் நடைபெறப்போகிறது என்பதனை ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K