கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஏதாவது ஒரு அனுகூலமான பாதையை காண்பிப்பார். கணவன் மனைவி குடும்ப உறவு இன்றைய தினம் சுபிட்சமாக இருக்கும்.
உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோஷமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமையும்.