மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து மின் கட்டணம் உயர்வு மக்களிடையே பெரும் சிரமம் அடைந்து வருகின்றது.அதனைதொடர்ந்து அரசு வழங்கும் மின்சார மானியத்தை தொடரந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
அதற்காக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.இருப்பினும் பெரும்பாலான மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்ததின் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை அவாகசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்த பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் விவசாய இணைப்புகளில் சுமார் ஐந்து லட்சம் பேர் தற்போது வரை ஆதார் எண்ணை இணைக்கவில்லை.அதுமட்டுமின்றி குடிசைகளுக்கான மின் இணைப்புகளிலும் பலர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
அதனை கணக்கிடும் பொழுது ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.அதனால் மீதமுள்ள அனைவரும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இதுவே இறுதியாக.இதனை மின் நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு மின் இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை இணைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு கால அவகாசம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.