தீபிகா படுகோன் – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்

0
282

தீபிகா படுகோன் – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில் 

பதான் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், ஆகியோர் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டனர்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்து தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தி திரைப்படம் தான் பதான். இந்த படத்தின் ஒரு பாடலில் தீபிகாவின் உடை இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் தடைகளை எல்லாம் மீறி இந்த படம் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். இதில் கலந்து கொண்ட நடிகை தீபிகா படுகோன் அழகான கவுன் அணிந்து அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்பட்டார். மேடையில் அழகாக தோன்றிய அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் பதான் படத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டு நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷாருக்கான் தீபிகா படுகோனுக்கு முத்தம் கொடுத்தது இந்த நிகழ்ச்சியிலும் அவர்களது கெமிஸ்ட்ரியை பேச வைத்தது. இந்தப்  புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ஆப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன், ஆகியோர் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

தீபிகாவுடன் கெமிஸ்ட்ரி குறித்து ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பியபோது என்னையும் தீபிகாவையும் பற்றி உங்களுக்குத் தெரியும். காதல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, இதற்கெல்லாம் ஏதேனும் சாக்கு வேண்டும். நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் நான் தீபிகாவின் கையை முத்தமிடுவேன் இதுவே எனது பதில் என்று கூறினார்.

ஷாருக்கான் உடன் கெமிஸ்ட்ரி குறித்து தீபிகாவிடம் கேட்ட பொழுது அதற்கு பதில் கூறிய தீபிகா கெமிஸ்ட்ரி சுவாரசியமாகவும், தெளிவாகவும் இருந்தது. ஆனால் கதாபாத்திரங்கள் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதற்கு சிறப்பு செய்தது எங்களது உறவு மற்றும் நாங்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்று பதிலளித்தார்.

2007 ஆம் ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக ஓம் சாந்தி ஓம் படத்தில் அறிமுகமான தீபிகாவிற்கு ஷாருக்கான் உடன் இது நான்காவது படமாகும். அடுத்து ஹேப்பி நியூ இயர் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு படங்களிலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு!  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை! 
Next articleமின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here