பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!
தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து திட்டங்களையும் எடுத்து வருவதாகவும் அதனால் மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் எனவும் அடிக்கடி கூறி வருவார்.
இவ்வாறு முதல்வர் கூறுகிறார் என்றால் அவர் எந்த அளவிற்கு மாணவர் மற்றும் மாணவிகளின் படிப்பில் அக்கறை உடன் திட்டங்களை செயல்படுத்துவார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அதேபோல ஒரு சில இடங்களில் பள்ளிகளில் உள்ள வேலைகளை மாணவர் மற்றும் மாணவிகளை வைத்து செய்து கொள்கின்றனர். இவ்வாறான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் உள்ளது.
எனவே இனிவரும் நாட்களில் மாணவர்- மாணவிகளை கொண்டு தங்களது வேலைகளை செய்து கொண்டால், அவ்வாறு செய்ய சொல்லி ஆணையிடும் ஆசிரியர் மற்றும் அதற்கு வேறு யாரெல்லாம் காரணமோ அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்ற ஆண்டு அதற்கு முன்பெல்லாம் கொரோனா தொற்று என்பதால் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் எடுக்க முடியா காரணத்தினால் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்து இருந்தது. ஆனால் இம்முறை பள்ளிகள் முழுமையாக செயல்பட்ட காரணத்தினால் மாணவர்கள் தேர்வு எழுதும் விகிதம் குறையாமல் இருக்கும் எனவும் அதேபோல தேர்ச்சி பெரும் விகிதமும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்தார்.