இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

0
277

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் பல மணி நேரம் இணைப்பு விமானங்களுக்காக காத்திருக்கும் பொழுதெல்லாம் பயணிகள் ஒரு தியேட்டரோ அல்லது ஷாப்பிங் மாலோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார். அந்த யோசனை தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சுமார் ரூ.250 கோடி மதிப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங், திரையரங்கம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,  ஹோட்டல்கள், கடைகள், கொண்ட கட்டிட பணிகள் தொடங்கி முடிவடைந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பயணிகளின் பொழுதுபோக்கிற்காக சென்னை விமான நிலையத்தில் தான் ஐந்து திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. முன்கூட்டியே வந்து விமானத்திற்காக அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள், இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள், ஆகியோரின் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கும், நண்பர்கள் உறவினர்களை வரவேற்கவோ அல்லது வழி அனுப்பவோ வருபவர்களுக்கும் இது திரையரங்கம் மிகவும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முறையாக திரையரங்கம் அமைக்கப்பட்டது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரையரங்குகளை நடிகர் சதீஷ், கூல் பாண்டி, ஆனந்த்ராஜ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் திறந்து வைத்தனர். ஒரே நேரத்தில் ஐந்து திரைகளிலும் 1150 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். திரையரங்கை அடைவதற்கு புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலத்தின் வழியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யலாம்.

 

Previous articleஎடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!!
Next articleஇந்த மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை! உங்களின் பணிகளை உடனடியாக முடித்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here