இந்த மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை! உங்களின் பணிகளை உடனடியாக முடித்து கொள்ளுங்கள்!
தற்போதுள்ள காலகட்டத்தில் வங்கிகள் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அனைத்து வகையான பண பரிமாற்றத்திற்கும் உதவியாக உள்ளது.வங்கிகள் விடுமுறை என்றாலே பண பரிவர்த்தனைகள் பெருமளவில் பாதிப்படையும்.மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெறுகின்றது.தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனையை வழங்கி வருகின்றது.
அதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே அனைத்து சேவைகளையும் பெறுகின்றனர்.ஆனாலும் ஒரு சில முக்கிய பணிகளுக்கு வங்கிக்கு நேரடியாக செல்லும் நிலை உள்ளது.அதனால் வங்கி விடுமுறை நாட்களை நாம் அனைவரும் தெரிந்துகொள்வது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
அந்தவகையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை,11 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை,12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை,18 ஆம் தேதி மகா சிவராத்திரி ஒரு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை, 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை,20 ஆம் தேதி மாநில தினம் அருணாச்சல பிரதேசம்,மிசோரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 21 ஆம் தேதி லூசார் சிக்கிமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை,25 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை விடுமுறை அதனையடுத்து 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இந்த மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.