இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் எந்த கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக இருப்பது கோவில்.அதன் காரணமாக தான் மக்கள் அனுமதிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் படிப்படையாக ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.அதனையடுத்து கடந்த மாதங்களில் தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிகளவு வர தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அம்மாவாசை,பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் வரும் திங்கள் கிழமை வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர் என வனத்துறை அறிவித்துள்ளது.மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறவும் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.மலையின் மீது இரவு நேரங்களில் தங்கவோ,நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அனுமதிக்கப்படும் இந்த நான்கு நாட்களில் கனமழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.