Breaking News, District News

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

Button

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்த கோவில்களில் மிக புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் சுவாமி கோவில்.இங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவது வழக்கம்.குறிப்பாக மாதந்தோறும் வரும்  பிரதோஷம் மற்றும் பவுர்ணமி , அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலை ஏறவும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு இன்று முதல் வரும் ஆறாம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறலாம் என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.அதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் பக்தர்களின் பாதுக்காப்பு கருத்தில் கொண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலை ஏறவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வரும் ஐந்தாம் தேதி பவுர்ணமி இருப்பினும் அன்றும் மழை பொழிவு இருந்தால் பக்கதர்களுக்கு மலை ஏற அனுமதி வழங்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளனர்.அனுமதி மறுக்கப்பட்ட நாட்களில் தாணிப்பறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இனி சிறுவர்கள் வாகனம் இயக்க கூடாது! மீறினால் பெற்றோருக்கு சிறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Leave a Comment