எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் 36 லட்சம் பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில் பயனர்கள்!
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போனுக்குள் அடங்கிவிட்டது.மேலும் வாட்ஸ் அப்,இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது.அதில் அனைத்தும் முதன்மையாக இருப்பது வாட்ஸ் அப் தான்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.இந்த நிறுவனம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களை ஈர்க்கும் வகையிலும், பயனர்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும் பல பல புதிய மாற்றங்களை கொடுத்து வருகின்றது.இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 13,89,000 வாட்ஸ் அப் கணக்குகளை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கி உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கியது குறிப்பிட்டத்தக்கது.