திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் கைவரிசையை காட்டிய பெண்கள் கைது!! 5 சவரன் நகைகள் மீட்பு!!

0
180
Tiruchendur Subramaniasamy Swamy Temple Women Arrested For Showing Hands To Devotees!! 5 Sawaran jewels rescue!!
Tiruchendur Subramaniasamy Swamy Temple Women Arrested For Showing Hands To Devotees!! 5 Sawaran jewels rescue!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் கைவரிசையை காட்டிய பெண்கள் கைது!! 5 சவரன் நகைகள் மீட்பு!!

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் செயின் திருட்டில் ஈடுபட்ட நெல்லையைச் சேர்ந்த செயின் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்ததுடன் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஐந்தரை சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக புகழ் பெற்றது இங்கே தினமும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்றபடி முருகப் பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்

இந்நிலையில் கடந்த சில நாட்களும் முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையை சேர்ந்த மல்லிகா என்பவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகை காணாமல் போய் உள்ளது இதேபோன்று நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை மற்றும் சாத்தான்குளம் அருகே உள்ள இடச்சிவிளையைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரிடமும் 10 கிராம் தங்க செயின்கள் திருடு போய் உள்ளது

இது தொடர்பாக செயினை பறி கொடுத்தவர்கள் திருச்செந்தூர் கோவில் புற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செயின் திருட்டில் ஈடுபட்டது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செயின் திருட்டு கும்பலான திருநெல்வேலி பாலபாக்கிய நகரை சேர்ந்த பேச்சியம்மாள் என்பதும் திருநெல்வேலி குமரேசன் நகர் பகுதி சேர்ந்த கலா என்பதும் தெரிய வந்தது இவர்கள் இருவர் மீதும் 30க்கும் மேற்பட்ட செயின் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது

இதை அடுத்து செயின் திருட்டில் ஈடுபட்ட பேச்சியம்மாள் மற்றும் கலாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி செயின் திருட்டில் ஈடுபடும் கும்பல் செயின் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Previous articleமுதல்வர் அவரது குடும்பம் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள்! அதிரடி கைது!
Next articleஎங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!!