முதல்வர் அவரது குடும்பம் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள்! அதிரடி கைது!

0
120

முதல்வர் அவரது குடும்பம் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள்! அதிரடி கைது! 

முதல் மந்திரி அவரது குடும்பம் மற்றும் அரசை பற்றி தவறாக பொதுவெளியில் விமர்சித்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் அரசு பற்றி  அவதூறாக பேசிய கான்ஸ்டபிள் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கந்திநகர் காவல் ஆணையாளர் ரானா டாடா கூறுகையில்  என்.டி.ஆர் மாவட்டத்தில் கவுரா வரம் என்ற கிராமத்தில் உள்ள பெட்ரோல் பம்பில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தன்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றியும் அவரது குடும்பம் மற்றும் அரசு பற்றி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அவர் பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த பேச்சு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பகைமையை வளர்க்கும் வகையிலும் இருந்துள்ளது.  இரு கட்சிகளுக்கு இடையே உள்ள பகைமை உணர்வை  தூண்டும் வகையில் பொதுவெளியில் பொறுப்புள்ள அரசு ஊழியர் ஒருவர் இவ்வாறு பேசுவது குற்றமாகும்.

கான்ஸ்டபிள் பேசுவதை வீடியோ எடுத்த நபர் சிலாகல்லு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பிறகு போலீஸ் கான்ஸ்டபிள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் ஜக்கையா பேட்டையில் உள்ள கூடுதல் ஜூடிசியல் முதல் தர நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அவருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயவாடா நகர காவல் ஆணையாளர் கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.  பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் சமூகத்தில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.