சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!!

Photo of author

By Rupa

சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!!

பூந்தமல்லி அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் வெங்கடேசன் இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.கடந்த 26 தேதி வேலைக்கு வந்து பணி செய்துள்ளார்.அதன்பின் அவர் வேலைக்கு வரவில்லை.

இந்த நிலையில் இன்று ரோகிணி திரையரங்கத்திற்கு தண்ணீர் இறக்க லாரி வந்துள்ளது. ராமலிங்கம் என்பவர் தண்ணீரை இறக்குவதற்காக தண்ணீர் தொட்டியை (சம்பு )திறந்து பார்க்கும் பொழுது உள்ளே அடையாளம் தெரியத நிலையில் உடல் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து உடலை கைப்பற்றி

இறந்த உடலை பார்க்கும்போது அழுகிய நிலையில் உடலை அடையாளம் காணமுடியவில்லை அதன்பிறகு அந்த உடலில் அணிந்திருந்த ஆடையை வைத்து வெங்கடேசன் தான் என்பது உறுதி செய்யப்பட்டனர். பின் அவர் உறவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடலை கீழ்பாக்கம் மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கடேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என தெரியவந்துள்ளது.

வெங்கடேசன் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டு கொலை செய்தனரா என்ற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.