காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு!  

0
256

காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு! 

சேலம் கொல்லம் பட்டியில் அமைந்துள்ள மத்திய சட்டக் கல்லூரியில் தர்மபுரியை வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடைய பெற்றோர் இந்தியன் வங்கியில் மேலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

அதே கல்லூரியில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய் மற்றும் தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சஞ்சய் மற்றும் ஹரிணி ஆகிய இருவரும் கரூரில் பள்ளியில் பயின்ற போது மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தங்களுடைய காதலை சட்டக் கல்லூரியிலும் தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் சஞ்சய் தனது காதலியுடன் அவரது வீட்டு மொட்டை மாடியில் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து மகளைக் காணாமல் மொட்டை மாடிக்கு வந்த ஹரிணியின் தாயார் சுகந்தி அங்கே சஞ்சயும் ஹரிணியும் தனியே பேசிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அங்கிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாததால் தவித்த சஞ்சய் திடீரென 50 அடி மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சஞ்சய் பலியானார். இதுப்பற்றி கன்னங்குறிச்சி போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

சஞ்சயின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காதலியின் தாய்க்கு பயந்து மாணவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleஇந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து!
Next articleவிண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here