பான் அட்டையுடன் ஆதார் இணைக்க இதுவே கடைசி தேதி உடனே முந்துங்கள்! இல்லையெனில் இந்த சலுகையை பெற முடியாது!
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறுகையில் நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதம் 31 ஆம் தேதி தான் இறுதி நாளாகும்.அதனால் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.இல்லையெனில் பான் அட்டை செல்லாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாறும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் இணைப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு ரூ 1000 செலுத்த வேண்டும்.மேலும் வருமான வரித் துறைக்கான கொள்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் விதிக்கின்றது.தற்போது வரை சுமார் 61 கோடி பான் அட்டை வழங்கபடுகின்றது.ஆனால் அவர்களில் 48 கோடி பேர் மட்டுமே பான் மற்றும் ஆதார் எண் இணைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இவர்களில் ஒரு சிலருக்கு பான் மற்றும் ஆதார் எண் இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதனால் மீதமுள்ள 13 கோடி பேரில் உரிய நபர்கள் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த இணைப்பை மேற்கொள்ள வேண்டும்.இந்த இணைப்பிற்காக முகாம்கள் நடத்தப்படுகின்றது.மேலும் இதற்காக பலமுறை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பான் அட்டையை பொது அடையாள அட்டையாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வணிகத் துறைக்குப் பயனளிக்கும்.இந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை என்றால் வரிச் சலுகைகளை இழக்க வாய்புள்ளது.ஒரு முறை பான் அட்டை செயல்படவில்லை என்றால் வருமான வரிச் சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.செயலற்ற பான் அட்டை மூலம் வரித் தாக்கல் செய்ய முடியாது.வங்கி மற்றும் பிற நிதி நடவடிக்கைகளுக்கான இணையதள பக்கங்களில் பான் ஆதார் இணைக்கதவரிகள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் 12 இழக்க ஆதார் எண் வழங்கப்படுகின்றது.தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான 10 எழுத்துக்கள் அல்லது எண்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் தான் பான் அட்டை, வருமான வரித் துறை மூலம் வழங்கப்படுகின்றது.