இனி திருட்டு வாகனத்தை உடனடியாக கண்டறிய முடியும்! போக்குவரத்து போலீசார் வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்! 

0
319
Now you can detect a stolen vehicle instantly! New technology released by traffic police!
Now you can detect a stolen vehicle instantly! New technology released by traffic police!

இனி திருட்டு வாகனத்தை உடனடியாக கண்டறிய முடியும்! போக்குவரத்து போலீசார் வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்!

தற்போதுள்ள சூழலில் போக்குவரத்து விதி மீறல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றது.அதனை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.அதனால் அபரதா தொகையும் பன் மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது குறித்து அறிவிப்பு வெளியானது அந்த அறிவிப்பின் படி அதிக வேகமாக இரு சக்கர வாகனம் இயக்கினால் ரூ 1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த விதியை மீறினால் ரூ 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினாலோ அல்லது தடையை மீறி வாகனம் ஓட்டினாலோ அவர்கள் ரூ 10000 அபராதமாக வழங்கவேண்டும்.இருசக்கர வாகனம் ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.இல்லையெனில் அபராதம் வழங்க வேண்டும்.

இது போன்ற விதிகள் விதித்ததை தொடர்ந்து சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதிநவீன ANPAR என்ற மேராக்கள் பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளனர்,இவை முதல்முறையாக 50 இடங்களில் 200 கேமராக்கள் அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது. திருட்டு வாகனங்களில் வாகன பதிவு எண் கேமராவில் பதிவான உடனடியாக காவல்துறைக்கு தகவல் வரும் விதமாக புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

Previous articleஅதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்! 
Next article தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்!