திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு!
பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருமலை ஏழுமலையான் கோவில். ஆண்டுதோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிவார்கள்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மலையேறவும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடந்த புரட்டாசி மாதம் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதும். அதனை தடுக்கும் விதமாக முன்னதாக இருந்த டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த டோக்கன் மூலம் யார் எப்பொழுது எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்பொழுது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம் என திருப்பதி தேவஸ்தானம் அந்த முறையை அறிமுகப்படுத்தியது.அதனைத் தொடர்ந்து திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவை டிக்கெட் இன்று தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இன்று காலை முதல் பிப்ரவரி 10ஆம் தேதி காலை 10 மணி வரை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.