எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! 15 நிமிடம் சூரிய ஒளி!
எலும்புகளை இரும்பு போன்ற வலுப்பெறுவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம்.
தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் பலதரப்பட்டு உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இதன் விளைவாக நம் உடலுக்கு மற்றும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தற்போது உள்ள உடல் இளைப்பு இல்லாத ஒக்காந்த இடத்தில் செய்யக்கூடிய வேலைகள் மற்றும் தூக்கமின்மை மன அழுத்தத்தின் காரணமாகவும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது இதனை தவிர்த்து எலும்புகளை இரும்பு போன்ற வலிமை பெறுவதற்கு நாம் சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பெற்ற பதிவு மூலமாக விரிவாக காணலாம்.
நான் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் மீன் வகைகளை சேர்த்துக் கொள்வது நம் எலும்புகளின் வலிமைக்கு மிகவும் உதவுகிறது. அதிகப்படியான வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும்.
அதிலும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த சால்மன் மீன் மற்றும் அத்தி மீன் ஆகியவர்களை நாம் எடுத்துக் கொள்வது மிகவும் நன்மைகளை அளிக்கக் கூடியது.வைட்டமின் டி ஆனது நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது
இதனை எவ்வித செலவுமின்றி தினசரி காலை நேரங்களில் 15 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நிற்கும் பொழுது நம் உடலுக்கு இயற்கையாக வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு நம் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் தயிரில் அதிக படியாக நிறைந்துள்ளது.
எனவே தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடுவதன் காரணமாக நம் எலும்புகள் வலிமை அடைந்து எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.பாலில் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு டம்ளர் பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உட்கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது. எலும்புகளின் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. எனவே தினசரி ஒரு கப் பால் குடிக்க வேண்டும்.