ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

0
467
#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டது.  அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன், மற்றும் தேமுதிக வேட்பாளர் சிவ பிரசாந்த் உட்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  அடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி, உட்பட 83 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது. ஓபிஎஸ் அணி வேட்பாளர் உட்பட 38 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது.

இன்று வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ள மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பட்டியலின் படி 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 77 வேட்பாளர்கள்+ நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட வேண்டியுள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 பெயர்கள் வீதம் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Previous articleதோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 
Next articleவிஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here