தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில் மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு!
கொரோனா பரவலின் போது அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் மக்கள் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்து பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பினார்கள்.
இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை முதல் கடந்த மாதம் முடிந்த பொங்கல் பண்டிகை வரையிலும் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் ஒரு சில பகுதிகளுக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணி காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவையில் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் காலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் அதிவிரைவு ரயில் வண்டி எண் 12696 அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும் இந்த ரயில் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி மாவேலிக்கரை, செங்கானூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் வழியாக செல்வதற்கு பதிலாக ஆலப்புழா வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடரந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி,காட்பாடி மற்றும் அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.