ரூ 300 கட்டண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! அடுத்த நிமிடமே முன்பதிவு நிறைவு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!
பக்தர்கள் அதிகளவு வரும் முதன்மை கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களின் திறப்பு பூஜைகள் நடைபெறும்.அதற்காக பக்தர்கள் அதிகளவு வருகை புரிந்தார்கள்.அதனால் தேவஸ்தான சார்பில் டைம் சிலாட் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த டோக்கனில் யார் எந்த நேரத்தில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அவ்வாறு பக்தர்கள் வரும்பொழுது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம் என தேவஸ்தானம் அறிவித்தது.அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் உள்ள தங்க தகடுகள் பதித்து நீண்ட நாட்கள் ஆனதால் புதியதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணிக்காக தேவஸ்தானம் சார்பில் பாலாலயம் நடைபெற்றது.அதன் காரணமாக இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 300 ரூபாய் தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தங்க தகடுகள் பதிக்கும் பணி தாமதமாகும் என கூறப்பட்டதால் சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது.அதனால் தங்க தகடுகள் பதிக்கும் பணி ஆறு மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.இதனால் ஆன்லைன் தரிசனம் ரத்து செய்யப்பட்ட 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஒன்பது பணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியான அடுத்த நிமிடமே அனைத்தும் முன்பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் மார்ச் மாதத்திற்கான அங்கப்பிரதட்சணை டிக்கெட் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.பக்தர்கள் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.