மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!!
தற்பொழுது பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி திட்டம் என தொடங்கி கர்ப்பப்பை வாய் தடுப்பூசி வரை தற்பொழுது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குடல்புழு நீக்கம் மாத்திரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கரூர் மாவட்டத்தில் ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வழங்கப்பட்டது.
மாத்திரையை சாப்பிட்டவுடன் முதலாவதாக ஒரு மாணவன் வாந்தி எடுக்க ஒன்றன்பின் ஒன்றாக சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் அடுத்தடுத்து வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். இதில் பலர் மயக்கம் அடையவும் செய்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகம் ஆம்புலன்ஸ் வரவழைத்து மாணவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு அழைத்து சென்ற மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டவுடன் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர்.
குடல் புழு நீக்கம் மாத்திரை சாப்பிட்டு மாணவர்கள் ஏன் மயக்கம் அடைந்தனர் எனக் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றது. காலாவதியான மாத்திரைகள் ஏதேனும் குழந்தைகள் சாப்பிட்டு விட்டார்களா என்ற பாணியிலும் விசாரணை செய்கின்றனர்.