18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

0
433
18th is a local holiday here! The order issued by the District Collector!
18th is a local holiday here! The order issued by the District Collector!

18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. மேலும் கடந்த தீபாவளி பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு, பொங்கல் பண்டிகை என அனைத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.

பொதுவாகவே அந்தந்த மாவட்டங்களில் திருவிழா,சிறப்பு தினங்கள் வருவதன் காரணமாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார்கள். இந்நிலையில் மகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நாளை மறுநாள் அதாவது 18.02.23 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

அதனை முன்னிட்டு கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleநெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்!
Next articleமதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!